பல் போனால் சொல் போச்சு

என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அப்படி சொல்லி இருக்கு என்ன சிறப்பு உண்டு?

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய் குறிக்கும் அடிப்படை மொழி கூறு. உலகில் உள்ளம் மிகப் பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகிறது. மொழிகளிலேயே மூத்த மொழியாம் தமிழ்மொழிக்கு அப்படி பல சொற்கள் உண்டு. அவை எண்ணிலடங்காதவை. அப்படி பலவகையான சொற்களை சேர்த்து வந்ததுதான் பல இலக்கிய வகைகள். சொல் என்பது ஓர் எழுத்தாளர் பல எழுத்துக்களாகும் ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக் கூறு. சொல்லை கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.

சொற்கள் எத்தனை வகை என்பதை விளக்க கீழ்வரும் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
அப்பா, அம்மாவுடன் மாநகர் திண்டுக்கல்லுக்கு சென்றோம். உடன் என் அத்தையும் மாமாவும் வந்தார்கள்.
இதில் அப்பா அம்மா மாநகர் திண்டுக்கல் என்பன பெயர்ச்சொற்கள் ஆகும். ஏனெனில் இவை பெயரைக் குறித்து வந்ததால் பெயர்ச்சொற்கள் ஆயின.அடுத்ததாக வரும் வந்தார்கள் என்ற சொல்லை ஆராய்ந்தோமானால், இது வினைச்சொல் ஆகும்.
ஒரு பொருளின் செயலை அல்லது இயக்கத்தை குறிப்பதால் இச்சொல் வினைச்சொல்
ஆயிற்று.அடுத்ததாக அத்தையும் மாமாவும் என்ற சொற்களை கூர்ந்து நோக்குவோம். அத்தையும் = அத்தை + உம் ; மாமாவும் = மாமா + உம் என்ற சொற்களை பார்த்தோமானால் இதில் “உம்” என்ற சொல் இணைப்புச் சொல்லாக வருகிறது. இந்துவும் சேர்ந்தால் அதில் சேரும் சொல்லுக்கு பொருள் உண்டு. இந்த இணைப்பு சொல்லை தனியாகப் பிரித்து பொருள் பார்த்தாள் அதில் பொருள் இருக்காது. இவை வினைச்சொற்களை சார்ந்தே வரும்.வேற எடுத்துக்காட்டுக்கள் பார்த்தோமென்றால், ராஜாவை பார்த்தேன். ராஜா + வை . இதில் வரும் வேற்றுமை உருபு வை இடைச் சொல்லாகும்.
இவ்வாறு இடைச்சொல் தனித்து இயங்காமல் பெயரையோ வினையையோ சார்ந்தே வரும்.
அடுத்து வரும் சொற்களை பார்ப்போம். “மாநகர்” மாநகர் என்னும் சொல்லில் உள்ள மா என்பது உரிச்சொல் ஆகும் . இதன் பொருள் பெரிய என்பது.
பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்ச்சொற்கள் வினைச் சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன உரிச்சொற்கள் ஆகும்.
இவ்வாறு இலக்கண வகைச் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.மீண்டும் அடுத்த இலக்கண தலைப்புடன் சந்திப்போம்.