முற்றியலுகரம் என்றால் என்ன?

(Definition by Tamil Lexicon: முற்றியலுகரம் (muṟṟiyal-ukaram)  , n. id. + இயல்- +. (Gram.) The letter ‘u’ in its full quantity or sound value; தனது மாத் திரையிற் குறையாத உகரம்.) 

முந்தைய பிளாகில் நான் குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆகியனவற்றை நன்கு விரிவாகப் பார்த்தோம். உங்களுக்கு தெரியும் உகரம் இகரம் ஆகியவற்றின் மாத்திரை அளவு அரை மாத்திரை ஆகும்.

ஆனால் தன் மாத்திரை அளவில் குறையாமல் இருந்தால் அதுதான் முற்றியலுகரம் ஆகும். அதாவது தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்.
 

அது எங்கு வருவன என்பதை கீழ்க்கண்ட உதாரணத்தை பார்ப்போம்.

 
பகு, பசு, படு, அது, தபு, பெறு – இவை தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (கு, சு, டு, து, பு, று) பெற்ற முற்றியலுகரங்கள்.
 
காணு, உண்ணு, உருமு – இவற்றின் ஈற்றில் உள்ள இடையின கரங்கள் (ழு, ளு, வு) முற்றியலுகரங்கள்.
 
இவ்வாறு தனிக்குறில் அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய் மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாக சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.

இதுபோல, முற்றியலுகர ஈற்றெழுத்தை உடைய சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால், பெரும்பாலும் வலி மிகும்.

  • தெரு + டை = தெருக்கடை
  • ரு + குவியல் = எருக்குவியல்
  • ரு + சிதைவு = கருச்சிதைவு
  • டு + காடு = நடுக்காடு
  • முழு + பாடம் = முழுப்பாடம்
  • ணு + கால் = கணுக்கால்
  • விழு + புண் = விழுப்புண்
  • சு + கூட்டம் = பசுக்கூட்டம்

எடுத்துக்காட்டுகளில் உள்ள சொற்களில் முதலெழுத்து குறிலெழுத்தாக இருக்கிறது. இரண்டாம் எழுத்து உகர உயிர்மெய்யாக இருக்கிறது. அவ்விரண்டு எழுத்துகளும் சேர்ந்து வரும் சொற்களாக இருக்கையில், வருமொழி வல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தது. அதனால் அங்கே வலி மிகுந்தது.