வழக்கு என்பது யாது?

என் அம்மா அடிக்கடி பின்வரும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அவை யாதெனில்
  1. சீக்கிரமா படுக்கையிலிருந்து எழுந்திரு!
  2. நல்லா சாப்பிடு!
  3. நல்ல மதிப்பெண் வாங்கணும்!
  4. பொண்ணுக்கு காலாகாலத்தில் கல்யாணம் முடிக்கணும்!
இந்த மாதிரி வார்த்தைகளை நாமும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். எதற்காக இதை நான் கூற வேண்டும்? தமிழ் வழக்கு என்ற ஒரு சொல் உண்டு. அது யாதெனில்
நம் முன்னோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ, அதானே அப்படியே நாமும் வழங்கி வருவதற்குப் பெயர் தான் “வழக்கு“. இந்த வழக்கு இரண்டு வகை உண்டு அவை யாதெனில் இயல்பு வழக்கு மற்றும் தகுதி வழக்கு ஆகும்.

இயல்பு வழக்கு என்றால் என்ன?

அதைப் பற்றி பார்ப்போம். குறிப்பாக ஒரு பொருளை சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர் நம் முன்னோர்கள். இந்த இயல்பு வழக்கு மூன்று வகையாகக் கூறுவர்.  அவை இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ ஆகும்.
இலக்கணமுடையது என்றால் என்ன?
ஒரு சொல்லயோ அல்லது ஒரு வார்த்தையில் வரும் சொற்களையோ இலக்கணப் பிழை இல்லாமல் வழங்கி வருவதனை இலக்கணமுடையது என்பர். இதற்குச் சான்றாக சாஸ்தா பாடம் படித்தான் அல்லது கயல்விழி விழித்துக் கொண்டாள். இத்தொடர் இலக்கணப் பிழையின்றி அமைந்திருக்கிறது. ஆதலால் இத்தொடர்கள் இலக்கணமுடையது ஆகும்.
இலக்கணப்போலி என்றால் என்ன?
ஒரு சொல்லையோ அல்லது ஒரு வார்த்தையில் வரும் சொற்களையோ இலக்கணமுடையது போல வழங்கி வருவதனை இலக்கணப்போலி ஆகும்.
எடுத்துக்காட்டு: 
  1. தண்ணீர் வாய்க்கால் வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
  2. நிறைய வீடுகள் புறநகரில் உள்ளது.
  3. ஏறு தழுவுதலில் காளையர்கள் காலையில் நுனிக்கொம்பில் கையில் ஏந்தி விளையாடுகின்றனர்.
மேலே உள்ள வாய்க்கால் புறநகர் நுனிக் கொம்பு ஆகிய சொற்களை பயன்படுத்தி இருக்கின்றோம். இந்து சொற்கள் இலக்கணமுடையது அல்ல. ஏனெனில் மேலே உள்ள தொடர்களில் வாய்க்கால் என்ற சொல்லுக்கு பதில் கால்வாய் என்று பயன்படுத்தி இருக்க வேண்டும். அதுபோல் புறநகர் என்ற சொல்லுக்கு பதில் நகர்ப்புறம் என்று உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். நுனிக்கொம்பு என்பதற்கு பதில் கொம்பு நுனி என்று உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி மாற்றி இருப்பதனால் இதனை இலக்கணப்போலி என்கிறோம்.
மரூஉ என்றால் என்ன?
எந்த ஒரு சொல் குறுகி ஒலித்தால் அந்த சொல் குற்றியலுகரம் என்பதைப் பற்றிப் பார்த்தோம். இதில் எந்த ஒரு சொல்லை சுருக்கி ஒலித்தால் அந்தச் சொல்லை மரூஉ என்று அழைக்கப்படும். கீழ்கண்ட உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்.
  1. என் மருமகன் தஞ்சையில் வேலை செய்து கண்டிருக்கிறார்.
  2. கோவை மக்களின் தமிழ் கொங்கு தமிழ் ஆகும்.
  3. தஞ்சைப் பகுதி எங்கும் காவிரி ஆறு கால்வாய் வழியாக ஓடி பயிர்களை செழிக்க செய்கிறது.
இதில் வரும் தஞ்சை மற்றும் கோவை என்பது சுருக்கி பயன்படுத்தப்பட்ட ஊர்களின் பெயர் ஆகும். தஞ்சை மற்றும் கோவை என்ற ஊர்களை தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் என்று சுருக்கி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி சுருக்கி பயன்படுத்தப்பட்டால் அந்த சொல்லை  மரூஉ ஆகும்.

தகுதி வழக்கு என்றால் என்ன?

பலர் முன்னிலையில் ஒரு சொல்லையோ ஒரு தொடர்யையோ கூறுவதற்கு இடர் பாடாக இருக்கும் பட்சத்தில், அச்சோ தொடர்களை நீக்கி தகுந்த சொற்களால் பொருள் மாறாமல் தெரிவிப்பது தகுதி வழக்கு ஆகும்.  இத் தகுதி வழக்கு இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படும்.
இடக்கரடக்கல் என்றால் என்ன?
பலர் முன்னிலையில் ஒரு சொல்லையோ ஒரு தொடர்யையோ கூறுவதற்கு இடர் பாடாக இருக்கும் பட்சத்தில், அச்சோ தொடர்களை நீக்கி தகுந்த சொற்களால் பொருள் மாறாமல் தெரிவிப்பது இடக்கரடக்கல் என்பர்.
 
எடுத்துக்காட்டு: 
  1. வாய் கழுவி வந்தேன் என்னும் தொடரை நீக்கி வாய் பூசி வந்தேன்.
  2. மலம் கழுவி வந்தேன் என்னும் தொடரை நீக்கி கால் கழுவி வந்தேன்.
மங்கலம் என்றால் என்ன?
அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழஙகுவது “மங்கலம்” என்பர்.
 
எடுத்துக்காட்டு:
  1. அவர் இறந்து விட்டார் என்பதற்கு பதிலாக அவர் இறைவனடி சேர்ந்தார்.
குழூஉக்குறி என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மக்களோ அல்லது ஒரு குழுவினரோ தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்கு குறிப்பாக வழங்கும் பெயர் குழூஉக்குறி என்பதாகும்.
 
எடுத்துக்காட்டு: 
  1. பைண்டிங் வேலை செய்பவர்கள் ஒட்டும் கோந்தை பசை என்றழைப்பர்.
  2. பொற்கொல்லர் பொன்னை பரி என்றழைப்பர்.