THE MAHABHARATHAM for Kids - Chapter 4 - Enemity within Gauravas

உள்ளுக்குள் எழுந்த பகை

அங்கே அத்தினாபுரத்தில் காந்தாரிக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் மூத்தவனே துரியோதனன் ஆவான். ஆண்டுகள் சென்றன. இளவேனி காலம் வந்தது.

எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கில பாண்டுவின் உள்ளத்தில் காம இச்சை தோன்றியது. அருகில் இருந்த மாத்ரியை அணைக்க முயன்றான். சாபத்தில் விளைவாக அவன் உயிர் நீங்கியது.

அவன் உடலுடன் தீக்குள் பாய்ந்து உயிரை விட்டாள் மாத்ரி. மகன்கள் அறியாச் சிறுவர்களாக உள்ளனர். அவர்களுக்காக வாழ வேண்டும் என்று நினைத்தாள் குந்தி அங்கிருந்த துறவிகள் குந்தியையும் பாண்டவர்களையும் அத்தினாபுரம் அழைத்து வந்தார்கள்.

அவர்களைத் திருதராட்டினனிடம் ஒப்படைத்தார்கள் கெளரவர்களும் பாண்டவர்களும் ஒன்றாகே அரண்மனையில் வளர்ந்தார்கள். தந்தை இல்லா பிள்ளைகளாதலால் பாண்டவர்களிடம் எல்லோரும் மிகு அன்பு காட்டினர். 

எங்கிருந்தோ வந்தவர்கள் இவ்வளவு சிறப்பு பெறுகிறார்களே. நம் உரிமையைப் பறிக்கிறார்களே என் கௌரவர்கள் பொறாமை கொண்டனர். முக்காலமமும் உணர்ந்தவரான வியாச முனிவர் அத்தினாபுரம் வந்தார்.

சத்தியவதியிடம் அவர், “அம்மா! இனிய நாட்கள் கழிந்து விட்டன. குரு குலத்தில் பிறந்தவர்கள் தங்களுக்குள்  போர் செய்யப் போகிறார்கள். பேரழிவு ஏற்படப் போகிற அதைப் பார்த்து நீங்கள் துன்பப்பட வேண்டாம். காட்டிற் சென்று கடவுள் நினைப்பில் காலத்தைக் கழியுங்க என்றார்.

அம்பிகா, அம்பாலிகாவையும் அழைத்து கொண்டாள் சத்தியவதி. மூவரும் காட்டிற்குச் சென்று தவம் செய்து வீடுபேறு அடைந்தனர்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சிறந்த ஆசிரியர்களை நியமித்தார் பீஷ்மர். அவர்களுக்கு நல்ல கல்வி தந்தார். பாண்டவர்கள் தங்கள் நற்பண்புகளால் எல்லோரையும் கவர்ந்தனர். வலிமை வாய்ந்த பீமனும் சும்மா இருக்கவில்லை. கௌரவர்களைக் கேலி செய்து தொல்லை கொடுத்து வந்தான்.

ஒருமுறை கௌரவர்கள் அனைவரும் ஒரு பெரிய மரத்தில் ஏறினார்கள். அதன் கிளைகளில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்தான் பீமன். அந்த மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்து ஆட்டத் தொடங்கினான்.

மரம் கிடுகிடுவென்று ஆடியது. அஞ்சி நடுங்கிய கௌரவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தார்கள். பீமனோ கேலி செய்து கலகலவென்று சிரித்தான். இவ்வாறு அடிக்கடி நிகழ்வே எரிச்சல் அடைந்தான் துரியோதனன். கொடியவனான அவன் பீமனைக் கொல்ல நினைத்தான். அதற்கான முயற்சியில் இறங்கினான்.

பீமன் உண்ணும் உணவில் கொடிய நஞ்சைக் கலந்தான். அதை உண்ட பீமன் மயக்கம் அடைந்தான். தன் வஞ்சகம் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தான் துரியோதனன். பீமனின் உடலைத் தூக்கிச் சென்று ஆற்றில் எறிந்தான்.

ஆற்றுக்குள் மூழ்கிய பீமனை அங்கிருந்த கொடிய பாம்புகள் கடித்தன. நஞ்சுக்கு நஞ்சு முறிவு ஆயிற்று. இதனால் மேலும் வலிமை பெற்றான் பீமன். மயக்கம் தெளிந்த அவன் அரண்மனை திரும்பினான்.

பீமனைக் கொல்ல முயற்சி நடந்ததை அறிந்தான் தருமன். “தம்பியர்களே! கௌரவர்கள் நம்மிடம் பகை கொண்டுள்ளனர். இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தான்.

கிருபாச்சாரியாரிடம் கெளரவர்களும் பாண்டவர்களும் வில் வித்தை கற்று வந்தனர். கிருபாச்சாரியாரைக் காண்பதற்காக அவரின் தங்கை கணவராகிய துரோணாச்சாரியார் அங்கு வந்தார்.

அவரை வணங்கி வரவேற்றார் பீஷ்மர். “இளவரசர்களுக்கு நீங்கள் ஆசிரியராக இருக்க வேண்டும். எல்லாக் கலைகளிலும் அவர்களை வல்லவர்களாக்க வேண்டும்” என்று வேண்டினார்.

துரோணரும் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புக் கொண்டார். தன் மனைவி கிருபியையும் மகன் அசுவத்தாமனையும் அங்கு வரவழைத்தார். இளவரசர்களுடன் தன் மகனுக்கும் கல்வி கற்றுத் தந்தார்.

பாண்டவர்கள் இயல்பாகவே நல்லவர்களாக இருந்தனர். தருமன் நீதிநெறிகளை மதிப்பவனாக பொறுமையுடையவனாக விளங்கினான். பீமனோ மற்போர் செய்வதிலும் கதையால் போரிடுவதிலும் வல்லவனாக இருந்தான்.

வில்லாற்றலில் அர்ச்சுனன் இணையற்றவனாகத் திகழ்ந்தான். நகுலன் குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தான். சகாதேவன் சோதிடக் கலையில் தேர்ச்சி பெற்று வந்தான். |

மாறாகக் கௌரவர்களோ வஞ்சகமும் சூழ்ச்சியும் பொறாமையும் கொண்டவர்களாக விளங்கினார்கள். மூத்தவனான துரியோதனனோ மூர்க்கமும் பிடிவாதமும் கொண்டவனாக இருந்தான்.

துரோணர் தம் மாணாக்கர்களுக்கு விற்பயிற்சி தந்து கொண்டிருந்தார். அருகிலிருந்த மரத்தின் கிளையில் கிளி ஒன்று அமர்ந்து இருந்தது.

தருமனை அழைத்த அவர், “வில்லில் அம்பைப் ஆட்டி அந்தக் கிளிக்குக் குறி வை” என்றார். அப்படியே குறி வைத்தான் தருமன்.

“தருமா! உனக்கு மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? கிளி தெரிகிறதா?” என்று கேட்டார். “எல்லாம் தெரிகிறது” என்றான் அவன். “குறி வைத்தது போதும். நீ போகலாம்” என்றார்.

அடுத்ததாகத் துரியோதனன் வந்தான். அவனிடமும் அதே கேள்விகளைக் கேட்டார். அவனும் தருமன் சொன்னது போலவே சொன்னான். அவனையும் திருப்பி அனுப்பினார் துரோணர். இப்படியே ஒவ்வொருவராகத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.

இறுதியாக அர்ச்சுனன் வந்தான். அவனிடமும் அதே கேள்விகளைக் கேட்டார். “ஐயா! எனக்கு மரமும் தெரியவில்லை . கிளையும் தெரியவில்லை . கிளியும் தெரியவில்லை . அதன் கழுத்து மட்டுமே தெரிகிறது” என்றான் அர்ச்சுனன்.

“அர்ச்சுனா! வில்லாளிக்குக் குறியில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். உனக்கு அந்த ஆற்றல் உள்ளது. நீயே சிறந்த வில்லாளி. அம்பை விடு” என்றார் அவர்.

அர்ச்சுனனின் வில்லில் இருந்து பாய்ந்து சென்றது அம்பு. அவன் குறி தவறவில்லை . கிளி கீழே விழுந்தது.

தம் மாணாக்கர்களின் கல்வி நிறைவுறும் நிலையில் உள்ளது. அவர்கள் திறமையை எல்லோரும் அறிய வேண்டும் என்று நினைத்தார் துரோணர்.