ஒரு பொருளோ அல்லது ஒரு ஆளுமையை புகழ் பெறுவதற்கு மிக முக்கியமான ஒன்று அடைமொழி. பலவகை பட்டதாக இருக்கும் ஒரு பொருளை பொதுவாக சுட்டும் பொழுது அதன் வகை குறித்து ஐயம் ஏற்படலாம். எனது அவற்றை இனம் பிரித்து காட்டுவதற்கு தனிச் சொல்லை பயன்படுத்துவர். அத்தனி சொல்லே அடைமொழி எனப்படும்.
சான்றாக பாடநூல் எனச் சொல்லும் பொழுது அதன் வகை குறித்து ஐயம் ஏற்படலாம். அதனைப் போக்க தமிழ் பாடநூல் கன்னட பாடநூல் கணக்கு பாட நூல் ஆங்கில பாட நூல் என அடை கொடுத்து கூறுதல் வேண்டும்.இவ்வாறு பொருள்களை இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள் இனமுள்ள அடைமொழி எனப்படும்.அடை மொழியில் இனமுள்ள அடைமொழி இனம் இல்லா அடைமொழி என இரு வகை உண்டு.மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் இனமுள்ள அடைமொழி வகையைச் சார்ந்தது. பின்வருவது இனமில்லா வகைகள். வெண்ணிலவு கருங்காக்கை செங்கதிரோன் இவற்றுக்கெல்லாம் இனமாக கூறவேண்டுமானால், கருநிலவு வெண் காக்கை, கரும் கதிரோன் எனக் கூறுதல் வேண்டும். இவ்வாறு ஒன்று இல்லாததனால் இவை போன்றவற்றை இனமில்லா அடைமொழிகள் என கூறுவர்.