தமிழ் ஏன் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள்? இது என்னுடைய நீண்ட நாள் கேள்வி? இந்த கேள்விக்கு பலரும் பலவாக பதில் கூறலாம். ஆனால் மிகச்சிறந்த பதிலாகவே இருக்கும் இது என நான் நினைத்து உங்களுக்காக இதோ….ஒவ்வொரு நாளையும் குறிப்பாக தமிழர் திருநாளை நம் முன்னோர்கள் தொன்று தொட்டு கொண்டாடி வருகின்றனர். மகிழ்ச்சியாக கொண்டாடினர். பொங்கல் திருநாளன்று வீட்டைத் தூய்மை செய்து, புத்தாடை அணிந்து பொங்கலிட்டு கதிரவனை வணங்கி வழிபட்டு அனைவருடன் சேர்ந்து விருந்து உண்ணுவோம்.ஒரு தினத்திற்கு இவ்வளவு அழகு தேவைப்படுகிறது. எவ்வாறு நம்மை நாம் புத்தாடைகளாளும், அணிகலன்களாளும் அழகு செய்து கொள்கிறோமோ, அதுபோல புலவர்கள் மற்றும் எழுத்தாளர்களும் தாங்கள் எழுதும் பாடல்களை சொல்லாலும் பொருளாலும் அழகுபடுத்துவர். எப்படி பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதுபோலவே தமிழும் அழகாகிறது. இப்படி புலவர்கள் அழகு படுத்தும் முறையை அணி இலக்கணம் எனலாம். அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள் செய்யுளை அழகு படுத்துவதனை , அணி என்றே வழங்கினர் அவ்வாறான அணிகள் இயல்பு நவிற்சி உயர்வு நவிற்சி முதலியன.
இயல்பு நவிற்சி அணி என்றால் என்ன?
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சி அணி எனப்படும்.தோயும் வெண்டயிர் மத்தொழி துள்ளவும் ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும் தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும் ஆய மங்கையர் அங்கை வருந்துவார்.மேற்கூறிய பாடலில் தயிர் கடையும் ஆகிய மங்கையரின் தன்மை உள்ளவாறு அழகுபட சொல்வதைக் காணலாம்.