ஆகுபெயர்

(எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்)

ஆகு பெயரை பற்றி ஏற்கனவே விரிவாகக் கண்டோம். முன்பு எழுதிய கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும். இந்த கட்டுரையில் எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் ஆகிய நான்கு அளவைப் பெயர்கள் பற்றி அறிவோம்.ஒலிம்பிக்கில்

இந்தியா மிகப்பெரிய நாடு.

இந்தியா பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றது.

இந்தியா ஹாக்கி விளையாட்டில் வெள்ளி தட்டிச்சென்றது

 இந்த மூன்று தொடர்களிலும் அமைந்துள்ள இந்தியா என்னும் சொல்லை உற்று நோக்குங்கள். முதல் தொடரில்உள்ள இந்தியா இடத்தைக் குறிக்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தொடரில் உள்ள இந்தியா, இந்திய வீரர்களையும் வீராங்கனைகளையும் குறிக்கின்றது. இவ்வாறு ஒரு பொருளின் பெயர், தனக்கு உரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொருபொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர் வகைகள் ஆகுபெயர் 16 வகைப்படும். அவற்றுள் பொருளாகு பெயர் முதலான ஆறு கடந்த கட்டுரையில் கண்டோம். அதனைக்காண இங்கே சொடுக்கவும். பிறகு பெயர்களை இந்த கட்டுரையில் காணலாம். அளவைக் குறிக்கும் பெயர்களைஅளவைப் பெயர்கள் என்பர். எண்ணல் அளவை, எடுத்தல் அளவை, முகத்தலளவை, நீட்டலளவை என்ன அளவைப்பெயர்கள் நான்கு வகைப்படும். 
  1. எண்ணல் அளவை ஆகுபெயர்
 
இரண்டு பெற்றால் இன்பமயம்.
 இந்திய குடும்பக் கட்டுப்பாடு அமைப்பு மேற்கொண்ட தொடரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்த தொடரில் இரண்டு என்பது எண்ணுப்பெயர். அப்பெண்ணுக்கு தொடர்புடைய குழந்தைக்கு பெயர் ஆகிவந்தது. எனது இது எண்ணல் அளவை ஆகுபெயர். 
  1. எடுத்தல் அளவை ஆகுபெயர்
 
ஒரு கிலோ என்ன விலை?
 பலசரக்கு அங்காடியில் அடிக்கடி கேட்கும் தொடர் இது. இத்தொடரில் கிலோ என்னும் எடுத்தல் அளவை பெயர், அவை குறிக்காமல், அவ்வளவு டைய பொருளுக்கு (சர்க்கரை, மாவு, பருப்பு…) ஆகி வந்தது. எனவே, இது எடுத்தல்அளவை ஆகுபெயர் ஆகும். 
  1. முகத்தல் அளவை ஆகுபெயர்
 
நாலு லிட்டர் தேவை
 இத்தொடரில் லிட்டர் என்னும் முகத்தல் அளவை பெயர், அவள் அதைக் குறிக்கவில்லை. மாறாக அவ்வளவுடையமண்ணெண்ணைக்கு ஆகி வந்தது. எனவே இது முகத்தல் அளவை ஆகுபெயர் ஆகும். 
  1. நீட்டல் அளவை ஆகுபெயர்
 
அஞ்சு கஜம் கொடு.
 இத்தொடரில், அஞ்சு கஜம் என்பது, அவ்வளவுடைய அளவுகோலை குறிக்காது, அதனால் நீட்டி  அளக்கப்பெறும்துணிக்கு ஆகி வந்தது. எனவே இது நீட்டல் அளவை ஆகுபெயர் ஆகும். குறிப்பு
“ஒன்று கொடு,  4 கிலோ தா,  2 லிட்டர் தேவை, ஐந்து முழம் வேண்டும்”
என்பன போல வரும் அளவு தொடர்கள் ஆகுபெயராம். “ஒரு மாம்பழம் கொடு ,ஒரு கிலோ நெய் வேண்டும்” என்பனஆகுபெயர் ஆகாது.