கடந்த பாடத்தில் இலக்கண வகையில் நால்வகை சொற்களை பற்றிக் கற்றுக் கொண்டோம். இந்தப் பகுதியில் நாம் இடுகுறிப்பெயர் மற்றும் காரணப் பெயரை பற்றி தெரிந்து கொள்வோம்.

இலக்கணத்தில் எந்த காரணமும் கருதாமல், ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர் ஆகும். காரணம் அறியவியாலப் பெயர்களெல்லாம் இடுகுறிப்பெயர்கள். Noun connoting the primeval sense in which it has been used.

உதாரணத்திற்கு மரத்திற்கு ஏன் மரம் எனப் பெயர் வந்தது? மரம் எனப் பெயர் வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. ஆதலால் இது இடுகுறிப்பெயர் ஆகும். தமிழில் அனைத்துமே இடுகுறிப்பெயர்களா என்றால் இல்லை என்றுதான் பதிலாகும்.

நாற்காலி என்பது நான்கு கால்கள் உள்ள ஒரு பொருள் ஆதலால் இதற்கு காரணம் உண்டு. இப்படி காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் தான் காரணப்பெயர்கள் எனப்படும்.

தமிழில் காரணப் பெயர்களே மிகுதியாக உள்ளன. பிறமொழிகளில் இடுகுறிப் பெயர்களை மிகுதியாக உள்ளன. பறப்பதினால் அது பறவை என்றாயிற்று. வளையல், செங்கல் , முக்காளி,  கரும்பலகை என பலவற்றை காரணப் பெயர்களாக கூறலாம்.

மலை, காடு மாடு இவையெல்லாம் இடுகுறிப் பெயர்கள் தான்.

மனம் என்பது அனைத்து மலைகளுக்கும் பொதுப்பெயர். அதேபோல் காடு மாடு என்பது அனைத்து வகை காடுகளுக்கும் மாடுகளுக்கும் பொதுப் பெயராகும். இவ்வாறு அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப் பெயர்களை இடுகுறிப் பொதுப்பெயர் எனக்கூறுவர்.

நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இடுகுறிப் பொதுப்பெயர் உண்டெனறால் இடுகுறி சிறப்பு பெயர் உண்டா என்று தானே? இதற்கு பதில் உண்டு என்பதுதான். மரம் என்னும் சொல் மா, பலா, வாழை, தென்னை முதலிய மரவகை அனைத்திற்கும் இடுகுறிப்பெயரா பொதுவாய் வரும். தென்னை என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி இடுகுறிப் பெயரா என்று ஒரு பொருளுக்கே அதாவது தென்னை மரத்திற்கு சிறப்பாய் வருவதனால் இடுகுறி சிறப்பு பெயராயிற்று.

அதேபோல் காரண பெயரிடும் பொதுப்பெயர் சிறப்புப்பெயர் என்று இருவகை உண்டு. நான் முன்பு கூறியதைப் போல் பரவை என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். பறப்பது நான் பறவை என காரணம் கருதி வழங்கும் பெயராயிற்று. காகம் குயில் புறா கிளி ஆகிய அனைத்தையும் பரவை என்னும் பொதுச் சொல்லால் அழைக்கின்றோம். ஆதலால் இதனை காரணப் பொதுப்பெயர் என்கிறோம்.

அடுத்து உதாரணத்திற்கு வருவோம் வளையல் என்பது பெண்கள் அணியக்கூடிய ஒரு அணிகலன் ஆகும். வழியில் போலவே சில பல பொருள்கள் வளைந்து வட்டமாக இருக்கும். இருப்பினும் அவை எல்லாம் வலையில் என அழைக்கப்படுவது இல்லை. இருப்பினும் இச்சொல் கையில் அணியும் வளையலை மட்டுமே குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் ஆயிற்று.