எழுத்து – Letter, character; அட்சரம்.

நம் எண்ணங்களை ஒலி வடிவாக பேசுகிறோம் இது மொழி ஆகும். இந்த மொழியே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது. அவன் அறிவு நிலையை நோக்கி பயணிக்க இந்த மொழி வேகமாக பயன்படுகிறது. ஒருவர் தம் கருத்தை வெளிப்படுத்தவும் அதனைக் கேட்போர் புரிந்து கொள்ளவும் கருவியாக அமைவதும் நாம் பேசும் மொழியே ஆகும். அதிலும் தமிழ் தொன்மையான மிகவும் மூத்த மொழி மற்றும் சுவைமிகுந்த தாகும். தமிழ் மொழியை பிழையின்றி பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவும் துணை செய்வது இலக்கணம் ஆகும்.

 
தமிழில் உள்ள இலக்கணம் 5 வகையாக பிரிக்கலாம். அவை எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என ஐவகைப்படும்.
 

“எழுத்து” க்களின் வகைகள் யாவை?

எழுத்து-க்கள் இரு வகைப்படும் அவை முதல் எழுத்து மற்றும் சார்பெழுத்து.
 
முதல் எழுத்து-க்கள்
 
முதல் வரை உள்ள உயிர் எழுத்து-க்கள் பன்னிரண்டும், க் முதல் ன் வரை உள்ள மெய் எழுத்து-க்கள் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். இவை சார்பெழுத்துக்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாக இருப்பதனால் முதல் எழுத்துக்கள் எனப்பட்டன.
 
சார்பெழுத்துக்கள்
 
முதல் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும். இவை உயிர்மெய், ஆய்தம்,  உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என பத்து வகைப்படும். இவற்றுள் உயிரளபடை, ஒற்றளபடை குறித்து இந்த பிளாக்கில் விரிவாக காண்போம்.
 

அளபெடை என்றால் என்ன?

 
செய்யுளில் ஓசை குறையும் போது, ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துக்கள் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதை அளபெடை என்கிறோம். புலவர்களும், தமிழ் அறிஞர்களும் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய அளபெடையை பயன்படுத்துகிறார்கள்.
 
 

அளபெடை எத்தனை வகைப்படும்?

 
அளபெடை இரண்டு வகைப்படும். அவை யாதெனில் உயிரளபெடை மற்றும் ஒற்றளபெடை.
 

உயிரளபெடை என்றால் என்ன?

 
செய்யுள்களில் ஓசை குறையும் போது, அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துக்கள் ஏறும் அளபெடுக்கும். இது உயிரளபடை எனப்படும். அவ்வாறு அளபெடுக்கும் போது, அவற்றுக்கு இனமான குறில் எழுத்துக்கள் குறியீடாக அதன் பக்கத்தில் வரும். ஐகாரத்திற்கு இகரமும், ஓளகாரத்திற்கு உகரமும் இன எழுத்தாக வரும்.
 
இந்து உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை. செய்யுளில் இசை நிறைக்க வரும் அளபெடையே செய்யுளிசை அளபெடை என்பர். ஓசை குறையா விட்டாலும் இனிய ஓசைக்காக அளபெடுத்தலை இன்னிசை அளபெடை ஆகும். இவ்விரண்டும் அல்லாமல் பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்ச பொருளில் வரும் அளபெடை, சொல்லிசை அளபெடை ஆகும்.
 
உதாரணங்கள் கீழே
 
செய்யுளிசை அளபெடைக்காண உதாரணம்
 
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
 
இக்குறளை நன்றாகப் படித்துப் பாருங்கள். கெடா என்பது கெடா இறுதியிலும், விடார் என்பது விடா அர் என இடையிலும் அளபெடுத்து வந்துள்ளது. எனவே, இது செய்யுளிசை அளபெடை ஆகும். இதற்கு இசைநிறை அளபெடை என்னும் வேறு பெயரும் உண்டு.
 
இன்னிசை அளபெடை காண உதாரணம்
 
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
 
கெடுப்பதும், எடுப்பதும் என ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக என்னும் து குறில் தூ என நெடிலாக மாறி அளபெடுத்து. எனவே இது இன்னிசை அளபெடை ஆகும்.
 

சொல்லிசை அளபெடை காண உதாரணம்

 
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
 
இக்குறட்பாவில் தழீஇ என்னும் சொல் அளவெடுத்து வந்துள்ளது. தழீ என்பது தழுவுதல் என்னும் தொழிற்பெயர் சொல், தழீஇ என வினையெச்சத் சொல்லாகப் பொருள் தருவதற்கு அளபெடுத்ததனால் சொல்லிசை அளபெடை ஆயிற்று.

ஒற்றளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறைந்தால் மெய் எழுத்துக்களும் அளபெடுக்கும். இது ஒற்றளபெடை எனப்படும்.

எங்ங்கி றைவனுள னென்பாய்
வெஃஃகுவார்க் கில்லை வீடு

இத்தொடர்களில் உள்ள ங் மற்றும் ஆகிய எழுத்துக்கள் இரு முறை வந்துள்ளன. இவ்வாறு ங் , ஞ் , ண் , ந் , ம் ,ன் ,வ் ,ய் , ல் ,ள் ஆகிய பத்து மெய்யும் ஒரு ஆயுதமும் ஆக பதினோரு எழுத்துக்களும் ஒரு குறிலை அடுத்து இரு குறில்கள் அடுத்தும் செய்யுளில் ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை என்று பெயர்.

நினைவில் கொள்க

  • செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை – செய்யுளின் ஓசையை நிறைவு செய்ய ஈரிசை கொண்ட சீர்கள் ஆக மட்டும் வரும்.

எடுத்துக்காட்டு : உழா அர், படா அர்.

  • இன்னிசை அளபெடை இனிய இசைக்காக குறில் நெடிலாக அளபெடுத்து, மூவசைச் சீர்கள் ஆக மட்டும் வரும்.

எடுத்துக்காட்டு: கெடுப்பதூஉம், எடுப்பதூஉம்.

  • சொல்லிசை அளபெடை- பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்ச பொருளில் வரும். இ என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும்.

எடுத்துக்காட்டு: நசைஇ, நிறீஇ.

  • ஒற்றளபெடை – வல்லினத்து க், ச் , ட் , த் , ப் , ற் என்னும் ஆறும் இடையினத்தில் ர் , ழ் என்னும் இரண்டும் ஆக இந்த எட்டு மெய்யெழுத்துக்கள் தவிர பிற மெய்யெழுத்துக்கள் அளபெடுக்கும்.

 

எழுத்துவகை மாத்திரை
உயிர்க்குறில், உயிர்மெய்க் குறில்
ஒன்று
உயிர் நெடில், உயிர்மெய் நெடில்
இரண்டு
மெய் ,ஆயுதம்
அரை
உயிரளபெடை
மூன்று
ஒற்றளபெடை
ஒன்று