உயிரெழுத்து குள்ளே உகரமும் இகரமும் சில இடங்களில் தம் மாத்திரையின்(இலக்கணத்தில் மாத்திரை என்பது ஒரு அளவுகோல் ஆகும். ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கும் பொழுதோ அல்லது கை நொடிக்கும் பொழுதோ ஆகும் நேரமே ஒரு மாத்திரை ஆகும்) குறைவாக ஒலித்து நிற்கும். அவ்விடத்திற்கு குற்றியலுகரம் என்றும் பெயர்.
குற்றியலுகரம் ஆவது என்னவென்றால் அது தனி குற்றெழுத்து அல்லாத மற்ற எழுத்துக்களுக்கு பின்னே மொழிகளில் இறுதியில் வல்லின மெய் எழுத்துக்களில் ஏறி நிற்கும் உகரம் ஆகும்.குற்றியலுகரம்
  1. நெடில் தொடர் குற்றியலுகரம்
  2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  3. உயிர் தொடர் குற்றியலுகரம்
  4. வன்தொடர் குற்றியலுகரம்
  5. மென்தொடர்க் குற்றியலுகரம்
  6. இடைத்தொடர் குற்றியலுகரம்
என ஆறு வகைப்படும்.குறிப்பாக நெடில் தொடர் குற்றியலுகரம் மாத்திரம் இரண்டு எழுத்து மொழியாகும், மற்றவை ஐந்தும் மூன்றெழுத்து முதல் எழுத்து மொழியும் வரும்.உதாரணமாக,
  • நாகு, ஆடு இவை இரண்டும் நெடில் தொடர் குற்றியலுகரம்
  • எஃகு, கஃசு இவை இரண்டும் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  • வரகு, பலாசு இவை இரண்டும் உயிர்த்தொடர் குற்றியலுகரம்
  • கொக்கு, கச்சு இவை இரண்டும் வன்தொடர் குற்றியலுகரம்
  • சங்கு, வண்டு இவையிரண்டும் மென்தொடர்க் குற்றியலுகரம்
  • அல்கு, எய்து இவை இரண்டும் இடைத்தொடர்க் குற்றியலுகரம்.
-Tamiltutor.com