சார்பெழுத்துக்கள் என்றால் என்ன? வீட்டில் முதல் பொறுப்பாளர்கள் பெற்றோர்கள். அவர்கள் தாமே தனித்து இயங்குகிறார்கள். அவர்கள் முதன்மையானவர்கள். அதனைப் போலவே நம் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெற்று விளங்குவதால் அதனை முதல் எழுத்துக்கள் என்கிறோம். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பெற்றோரை சார்ந்து இருப்பதை போலவே முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்கிறோம்.உதாரணத்திற்கு உடல் என்கிற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இதில் வரும் முதல் எழுத்தான “உ” என்பது உயிரெழுத்து. “ட”, “ல்” எழுத்துக்கள் முறையே உயிர்மெய் எழுத்து மற்றும் மெய் எழுத்து ஆகும். “ட்” + “அ” = “ட”. இதில் “ட்” என்னும் மெய்யெழுத்தும், “” என்னும் உயிர் எழுத்தும் சேர்ந்து, “ட” என்னும் உயிர் மெய் எழுத்தாக பிறந்தது. இதனைப் போன்றே மற்ற உயிர்மெய்யெழுத்துக்களும் உயிரையும் மெய்யையும் சார்ந்து வரும். இதுவே சார்பு எழுத்துக்கள் ஆகும்.சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும் அவை பின்வருமாறு. உயிர்மெய், ஆயுதம், உயிரளபடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகும்.