பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழிக்கு ஏற்ப சொல் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதனை இந்த ப்ளாக்கில் ஆராய்வோம்.
ஓர் எழுத்தானது தனித்தேனும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தேனும் ஒரு பொருளை உணர்த்துமானால் அது சொல் எனப்படும்.
பதம், மொழி, கிளவி என்பன சொல் என்பதன் வேறு பெயர்கள். பதம் என்பது பகாப்பதம், பகுபதம் என இரு வகை உண்டு.
பகாப்பதம்
பிரித்தால் பொருள் தராது சொல் பகாப்பதம் எனப்படும். பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் அடிப்படையில் பகாப்பதம் நான்கு வகை உண்டு.
- பெயர்ப் பகாப்பதம் – மரம், நாய், நீர்
- வினைப் பகாப்பதம் – உண், காண் ,எடு
- இடைப் பகாப்பதம் – தில், மன், பிற
- உரிப் பகாப்பதம் – சால, நனி, கடி, உறு
குறிப்பு: இடைச்சொல்லும், உரிச்சொல்லும் பகாப்பதகளாகவே இருக்கும்.
பகுபதம்
பகுதி விகுதி இடைநிலை என பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும். பகுபதம் – பிரிக்கவியலும் பதம்.
பகுபதம் பெயர்ப் பகுபதம், வினைப்பகுபதம் என இருவகைப்படும்.
பெயர்ப் பகுபதம்: பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடியாக தோன்றுவது பெயர்ப்பகுபதம்.