தமிழுக்கும் கணக்கிற்கும் மிகுந்த மற்றும் அழகிய தொடர்புண்டு 😉. கணக்கில் பகு எண் (composite number) பகா எண் ( prime number) என இரு வகை உண்டு. பகா எண் என்பது ஒண்ணாலும் மற்றும் தன்னாலும் வகைப்படும் எண்ணுக்கு பகா எண் எனப்படும்.
முந்தைய இலக்கண பாடத்தில் சொல்லைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதாவது சொல் என்பது ஓர் எழுத்தாக தனித்து நின்றும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து நின்று பொருள் தரும்.
பதம் என்றாலும் சொல் என்றாலும் ஒன்றுதான். மொழி, கிளவி என்பன அதன் வெவ்வேறு பெயர்கள். ஓர் எழுத்தானது தனித்து நின்று பொருள் தந்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். இவை தமிழில் 42 உள்ளன. உதாரணத்திற்கு தை, பை, கை, பூ, தீ, வை, தா, ஈ, கா, மா…. முதலியன.
எழுத்துக்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தந்தால் அது எழுத்து தொடர் மொழி எனப்படும்.
உதாரணத்திற்கு நூல், பாடநூல், கவிதை, எழுதுகோல், வீடு, சந்தை, மாடு…. முதலியன.

பகாப்பதம்(Prime Word) என்றால் என்ன?

பகுத்தல் என்றால் பிரித்தல் என்பது பொருளாகும். பகா என்றால் பிரிக்க இயலாதது என்று பொருள்படும்.   Word, base or suffix which cannot be analysed into parts
பிரிக்க இயலாத சொல் பகாப்பதம் எனப்படும். உதாரணம் மண் கல் பொன் இவை அனைத்தும் பெயர்ப் பகாப்பதங்கள். நட, வா, போ, செய், நில், இவை அனைத்தும் வினைப் பகாப்பதங்கள் ஆகும்.

பகுபதம் (Divisible word) என்றால் என்ன??

பகுதி விகுதி முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழி. A word can be analyzed into root, suffix, etc
பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்று ஆறாக பகுக்க முடியும். அதாவது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவை ஆறுவகை பெயர்களை அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச்சொற்கள்.
சொல்வினைபகுதிவிகாரம்சந்திஇடைநிலைசாரியைஎழுத்துப்பேறுவிகுதி
நடந்தனள்செய்வினைநடந்(த்)‘த்’ இறந்தகால இடைநிலை,அன்‘அள்’ பெண்பால் வினைமுற்று விகுதி
படுத்ததுசெய்வினைபடுத்‘த்’ இறந்தகால இடைநிலை,‘து’ ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
பட்டதுசெயப்பாட்டுவினைபடு‘பட்டு’ ஆனது‘ட்’ இறந்தகால இடைநிலை,‘து’ ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
செய்யாதஎதிர்மறை வினைசெய்யகர ஒற்று இரட்டியது விகாரம்‘ஆ’ எதிர்மறை இடைநிலை, ‘த்’ இறந்தகால இடைநிலை,‘அ’ பெயரெச்ச விகுதி
எழுதுதல்தொழிற்பெயர்எழுது‘த்’‘அல்’ தொழிற்பெயர் விகுதி
பகுபதம் இரண்டு வகைப்படும் பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம்.
பெயர்ப் பகுபதம்
  • பொருளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் கண்ணன் இனியன், பொன்னன் போன்றவை.
  • இடத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப்பகுபதம் மதுரைக்காரன், திண்டுக்கல்காரன், கும்பகோணத்தான் போன்றவை.
  • காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் ஆதிரையான், பகலோன், வெயிலான் போன்றவை.
  • சினையை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் கண்ணன், சீத்தலையான், கயல்விழி போன்றவை.
  • குணத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் கரியன், நெட்டையன், குட்டையன் போன்றவை.
  • தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம் தச்சன், கொல்லன், கருமான் போன்றவை.
வினைப் பகுபதம்
தெரிநிலை வினைச் சொற்கள் குறிப்பு வினைச்சொற்கள் காலத்தை குறிப்பாக அல்லது வெளிப்படையாக காட்டும் வினைச்சொற்கள் வினைப் பகுபதம் ஆகும்.
எடுத்துக்காட்டு
  • நடந்தான் நடவான்- தெரிநிலை வினைப் பகுபதம்
  • பொன்னன் அகத்தான் – குறிப்பு வினைப் பகுபதம்
  • நடந்தவன் நடவாத வன்- தெரிநிலை( வினையாலணையும் பெயர்).
  • பொன்னவன் இல்லாதவன் குறிப்பு (வினையாலணையும் பெயர்)