சிங்கம் முழங்கும் -சில மரபுச் சொற்கள் உங்கள் பார்வைக்காக

ஏற்கனவே மரபுச்சொற்களை பற்றி பார்த்தோம் அதில் நாம் குறிப்பிட்டது யானைக்குட்டி, யானைக்கன்று. யானைக்குட்டி என்பது மரபு பிறழ்ந்த சொல். யானைக்கன்று என்பதே மரபுச்சொல். முன்னோர் இச்சொல்லை எப்படி வழங்கினாரோ அச்சொல்லை அப்படியே ஏற்று நாம் வழங்குதல் மரபு.
முன்னோர் சொல்லை எப்படி வழங்கினாரோ அச்சொல்லை அப்படியே ஏற்று நாம் வழங்குதல் மரபுச்சொல். We accept and practice the word as it was given by the ancestor.
விலங்குகளின் இளமைப் பெயர்கள்
அணில் பிள்ளை
யானைக்கன்று
நாய்க்குட்டி
கழுதைக்குட்டி
கீரிப்பிள்ளை
மான் கன்று
பூனைக்குட்டி
பன்றிக்குட்டி
சிங்கக் குருளை
எருமைக்கன்று
ஆட்டுக்குட்டி
எலிக்குட்டி
புலிப்பறழ்
குதிரைக்கட்டி
குரங்கு குட்டி
விலங்குகளின் வாழிடங்கள் (வசிக்கும் இடங்கள்)
ஆட்டுப்பட்டி
கோழிப்பண்ணை
யானை கூடம்
குதிரைக் கொட்டில்
மாட்டுத் தொழுவம்
வாத்துப் பண்ணை
விலங்கு மற்றும் பறவைகளின் ஒலி மரபு
ஆந்தை அலறும்
குதிரை கனைக்கும்
நரி ஊளையிடும்
கழுதை கத்தும்
குயில் கூவும்
புலி உறுமும்
காக்கை கரையும்
கோழி கொக்கரிக்கும்
மயில் அகவும்
கிளி கொஞ்சும்
சிங்கம் முழங்கும்
யானை பிளிறும்
தாவர உறுப்பு பெயர்கள்
ஈச்ச ஓலை
தாழைமடல்
பனையோலை
சோளத்தட்டை
தென்னை ஓலை
பலா இலை
மாவிலை
மூங்கில் இலை
வாழை இலை
வேப்பந்தழை
கமுகங்கூந்தல்
வாழைத்தண்டு
காய்களின் இளநிலை
அவரைப்பிஞ்சு
மாவடு
முருங்கை பிஞ்சு
தென்னங்குரும்பை
வாழைக்கச்சல்
வெள்ளரிப்பிஞ்சு
செடி கொடி மரங்களின் தொகுப்பிடம்
ஆலங்காடு
சவுக்குத் தோப்பு
தென்னந்தோப்பு
கம்பங்கொல்லை
சோளக்கொல்லை
தேயிலை தோட்டம்
பனந்தோப்பு
பலா தோப்பு
பூந்தோட்டம்
பொருள்களின் தொகுப்பு
ஆட்டு மந்தை
கற்குவியல்
சாவிக்கொத்து
திராட்சைக் குலை
வேலங்காடு
பசு நிரை
மாட்டு மந்தை
யானை கூட்டம்
வைக்கோல் போர்
பொருளுக்கேற்ற வினை மரபு
சோறு உண்
நீர் குடி
பால் பருகு
பழம் தின்
பாட்டு பாடு
கவிதை இயற்று
கோலம் இடு
தயிர் கடை
விளக்கை ஏற்று
தீ மூட்டு
படம் வரை
கூரை வேய்