அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
மேலே கூறிய இக்குறள் நமது தலைப்புக்கு மிகச் சறந்த எடுத்துக்காட்டு என்று தான் கூற வேண்டும்.  ஏனெனில் இரண்டு இடத்தில் போலி கான உதாரணத்தை வள்ளுவப் பெருமான் கூறியுள்ளார். இதில் வரும் அகன் என்னும் சொல் அகம் என்னும் சொல்லை குறிக்கிறது. அதேபோல் முகன் என்னும் சொல் முகம் என்ற சொல்லைக் குறிக்கிறது. அகம், முகம் என்பதற்கு பதிலாக அகன், முகன் என எழுதினாலும் பொருள்.
இவ்வாறு ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதனை போலி என்பர்.
போலி மூன்று வகைப்படும் அவை முதற்போலி, இடைப்போலி, இறுதிப் போலி என மூவகை உண்டு. உதாரணத்திற்கு அகன் என்பது இறுதி போலி ஆகும். ஏனெனில் அகம் என்பதற்கு பதில் அகன் என்றே குறிக்கிறது. இதில் கடைசி எழுத்தான ம் மருவி ன் ஆகியது.
முதற்போலி எனப்படுவது ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது முதற்போலி ஆகும்.
அதேபோல் ஒரு சொல்லின் இடையில் மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைப்போலி ஆகும்.
இதேபோல் முரசு என்ற சொல் முரைசு எனலாம்.
ஒரு சொல்லின் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இறுதிப் போலி அல்லது கடைப்போலி ஆகும்
எடுத்துக்காட்டு அறம், அறன் பந்தல் பந்தர்.
அதேபோல்
ஒரு சொல்லில் உள்ள அனைத்து எழுத்துக்களும் மாறினாலும் அதனுடைய பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
உதாரணம் அஞ்சு, ஐந்து என்ற சொல்.