வேற்றுமை என்றால் என்ன?
வேற்றுமையை பற்றி படிக்கும் முன் எழுவாய், செயப்படுபொருள் என்ற இரு சொற்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கீழ்வரும் 3 சொற்றொடர்களை உதாரணமாக கொள்ளலாம்.
- கண்ணதாசன் வந்தார்
- கண்ணதாசனைப் பார்த்தான்
- கண்ணதாசனால் கவிதை இயற்றப்பட்டது.
முதல் தொடரில் வரும் கண்ணதாசன் என்னும் பெயர் எழுவாய் ஆகும்.
இரண்டாம் தொடரில் வரும் கண்ணதாசன் என்னும் பெயர் செயப்படுபொருள் ஆகும்.
மூன்றாம் தொடரில் வரும் கண்ணதாசன் என்னும் பெயர் செய்யப்படும் பொருளாகவும் கருத்தாகும் வேறுபடுகிறது.
இவ்வாறு
பெயரை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.
வேற்றுமை எட்டு வகை உண்டு. அவை யாதெனில்
- எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை
- செயப்படுபொருள் வேற்றுமை அல்லது இரண்டாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
- ஏழாம் வேற்றுமை
- விளிவேற்றுமை அல்லது எட்டாம் வேற்றுமை
வேற்றுமையை பற்றி தெரிந்து கொள்ளும் முன் வேற்றுமை உருபுகள் பற்றி அறிவது இன்றியமையாதது.
ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன வேற்றுமை உருபுகள் ஆகும்.
இந்த பிளாக்கில் சிறிது விரிவாக தெரிந்து கொள்வோம் வேற்றுமை உருபுகள் பற்றியும், அது எவ்வெப் பொருளில் வரும் என்பது பற்றியும் அறிவது சிறப்பு.
முதல் வேற்றுமை என்றால் என்ன?
அகிலன் வந்தார் என்பது ஒரு தொடர். இத்தொடரில் அகிலன் என்பது எழுவாய் ஆகும். இந்த எழுவாய், வந்தார் என்னும் பயனிலையை ஏற்று இயல்பாக வருகிறது. இந்த எழுவாய் வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றுள் ஒன்றினை பயனிலையாகக் கொண்டு முடியும். இவ்வாறு வருவது எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை எனப்படும். குறிப்பாக இதற்கு உருபு இல்லை.
கீழ்க்கண்ட சொற்றொடர்கள் முதல் வேற்றுமைக்கு உதாரணங்கள்.
- குதிரை வந்தது – வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.
- அகிலன் என் தம்பி – பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது.
- கீர்த்தி யார்? – வினாப் பெயர் பயனிலை கொண்டு முடிந்தது.
இரண்டாம் வேற்றுமை என்றால் என்ன?
உயிர் எழுத்தான ஐ இரண்டாம் வேற்றுமை உருபு. உதாரணத்திற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரக்கன்றை நட்டார். இத்தொடரில் அப்துல் கலாம் என்பது எழுவாய். மரக்கன்று என்பதும் பெயர்ச்சொல். அது ஐ என்னும் உருபை ஏற்று செயப்படுபொருளை உணர்த்துகிறது. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர். இதன் உருபு ஐ ஆகும்.
அது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகை பொருள்களில் வரும்.
- ராஜா பள்ளியை கட்டினான் –ஆக்கல்
- ராஜராஜ சோழன் பகைவரை அழித்தான் – அளித்தல்
- குந்தவை கோவிலை அடைந்தார் – அடைதல்
- ராஜேந்திரன் சினத்தை விடுத்தான் – நீத்தல்
- வானதி குயிலைப் போன்றவள் – ஒத்தல்
- குலோத்துங்கன் செல்வத்தை உடையவன் – உடைமை
மூன்றாம் வேற்றுமை என்றால் என்ன?
ஆல், ஆன், ஒடு, ஓடு என்பது மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை தம்மை ஏற்ற பெயர் பொருளை கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி பொருளாக வேறுபடுத்தும். இவற்றுள் ஆல், ஆன் உருபுகள் கருவி, கருத்தா ஆகிய இரு பொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
உதாரணங்கள்
- நாரால் கயிறு திரித்தான்.
முதற்கருவி காரியம் ஆக மாறி அதாகவே இருப்பது.
- கையால் கயிறு திரித்தான். துணைக்கருவி காரியம் செயல்படும் வரை துணையாக இருப்பது.
இதேபோல் கருத்தாவும் இயற்றுதல் கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்.
உதாரணங்கள்
- தச்சன் நாற்காலி செய்யப்பட்டது. இயற்றுதல் கருத்தா. அதாவது தானே செய்வது.
- கோவில் அரசனால் கட்டப்பட்டது. ஏவுதல் கருத்தா. தான் செய்யாமல் பிறரை செய்ய வைப்பது.
உடனிகழ்ச்சி என்றால் என்ன?
ஓர் எழுவாயின் செயலுடன் பிறிதொன்றன் அது செயலும் உடன் இகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.
உதாரணங்கள்
- தாயோடு குழந்தை சென்றது.
- பூனையோடு குட்டியும் சென்றது.
கருவிப் பொருளில் கொண்டு என்னும் சொல்லும் உடனிகழ்ச்சிப் பொருளில் உடன் என்னும் சொல்லும் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணங்கள்
- நூல்கொண்டு தைத்தான்.
- ஆறுமுகன் உடன் வள்ளி சென்றாள்.
நான்காம் வேற்றுமை என்றால் என்ன?
மெய்யெழுத்தான கு நான்காம் வேற்றுமை உருபு ஆகும். இது கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல் , பொருட்டு, முறை, எல்லை என பல பொருளில் வரும்.
உதாரணங்கள்
- புலவருக்கு பரிசு கொடுத்தார் – கொடை
- நோய்க்கு பகை மருந்து – பகை
- பாறைக்கு நண்பர் கபிலர் – நட்பு
- வீட்டுக்கு ஒரு பிள்ளை – தகுதி
- வளையலுக்கு பொன் – அதுவாதல்
- கூலிக்கு வேலை – பொருட்டு
- கோவலனுக்கு மனைவி கண்ணகி – முறை
- திருத்தணிக்கு வடக்கே வேங்கடம் – எல்லை
"கு" வுக்கு பதிலாகப் பொருட்டு, நிமித்தம் என்பன சொல்லுருபுகளாக வரும்.
உதாரணங்கள்
- கூலியின் பொருட்டு வேலை செய்தான்.
- வேலையின் நிமித்தம் அயலூர் சென்றான்.
“கு” உடன் ஆக என்பதும் சேர்ந்து வரும்
உதாரணம்
- கூலிக்காக வேலை செய்தான்.
ஐந்தாம் வேற்றுமை என்றால் என்ன?
இல், இன் என்பன ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை தம்மை ஏற்ற பெயர் பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப்பொருளாக வேறுபடுத்தும்.
உதாரணங்கள்
- தலையின் இழிந்த மயிர் – நீங்கல்
- பாலின் நிறம் வெண்மை – ஒப்பு
- திண்டுக்கல்லின் மேற்கு கேரளா – எல்லை
- அறிவில் சிறந்தவர் இளங்கோ – ஏது
இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குறிய சொல்லுருபுகள் ஆகும்.
உதாரணங்கள்
- ராஜா ஊரில் இருந்து வந்தான் – இருந்து
- அரசன் தேரினின்று இறங்கினான் – நின்று
- சாந்தா என்னை விட பெரியவள் – விட
- தமிழைக் காட்டிலும் சுவையான மொழி உண்டா? – காட்டிலும்
ஆறாம் வேற்றுமை என்றால் என்ன?
அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை உருபுகள். அது, ஆது என்பன ஒருமைக்கும் அ என்பது பன்மைக்கும் வரும். உருபுகள் கிழமைப் பொருளில் வரும்.
உதாரணங்கள்
- அவனது வீடு
- எனது நூல்
- சித்திரை வைகாசி என தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு.
ஆறாம் வேற்றுமைக்கு உடைய என்பது சொல்லுருபாக வரும்.
உதாரணங்கள்
- என்னுடைய வீடு
- நண்பனுடைய சட்டை
ஏழாம் வேற்றுமை என்றால் என்ன?
கண், கால், மேல், கீழ், இடம், இல், இவை ஏழாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
உதாரணங்கள்
- புல்லாங்குழலில் ஓசை – இல்
- வீட்டின்கண் யானை – கண்
- அவளுக்கு அவன் மேல் வெறுப்பு – மேல்
- சட்டையில் பணம் உள்ளது – இல்
இல் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்பு , ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வரும். ஏழாம் வேற்றுமை உருபு இல் இடப் பொருளில் வரும்.
உதாரணங்கள்
- மாலையில் மலர்கள்.
- எல் ஏழாம் வேற்றுமை உருபு இடப் பொருளில் வந்தது.
- மாலையிலிருந்து மலரை பிரித்தான்.
இல் ஐந்தாம் வேற்றுமை உருபு நீங்கள் பொருளில் வந்தது.
விளி வேற்றுமை அல்லது எட்டாம் வேற்றுமை என்றால் என்ன?
படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயர் ஆக்கி அழைக்க இந்த வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளி வேற்றுமை என்று வழங்குவர்.
உதாரணங்கள்
- தவா வா!
- கிளியே கொஞ்சிப் பேசு!
One thought on “வேற்றுமை (Difference)என்றால் என்ன?”