அத்தியாயம் 17 தாயும் மகனும்

அத்தியாயம் 17 தாயும் மகனும்

விடிகாலை நேரம், வழக்கம் போல நீராடிய கர்ணன் (Karnan) கதிரவனை வழிபட்டான். அவன் முன் தோன்றிய கதிர்க் கடவுள் “கடவுளே! உனக்கு ஆபத்து வர உள்ளது.

இந்திரன் தன் மகன் அர்ச்சுனனுக்காக உன்னிடம் வரப் போகிறான். உன் கவச குண்டலங்களைத் தானமாகக் கேட்கப் போகிறான். அவை உன் உடலில் இருந்தால் உனக்க அழிவு இல்லை. அவற்றைத் தந்து விடாதே” என்றார்.

“தந்தையே யாரும் எதையும் கேட்டு நான் மறுத் இல்லையே” என்றான் கர்ணன். “மகனே! இந்திரன் பதிலுக்கு சக்தி ஆயுதத்தைக் கேள். யாரையும் கொல்ல ஆற்றல் அதற்கு உண்டு” என்று சொல்லி மறைந்தார் அவர்.

அதன்படியே அந்தணர் வேடத்தில் இந்திரன் கர்ணனிடம் வந்தார். கவச குண்டலங்களைப் பெற்றார். பதிலுக்கு சக்தி ஆயுதத்தைத் தந்தார். “இந்த ஆயுதம் எதிரியைக் கொன்றவுடன் என்னிடம் வந்துவிடும்” என்று சொல்லி மறைந்தார். 

அண்டர்யாவருமலர்மழைபொழிந்தனரந்தரதுந்துபியார்ப்பக்

கொண்டல்வாகனன் கொண்டமெய்யொழிந்துதன்கோலமெய்யுடன் வெளிநின்றான் கண்டுமாமனமுருகியேகளித்திடுங்கன்னனுக்கந்நெடுங்கடவுண்

மண்டுபோரினில் வயந்தருமிதுவென மற்றோரு கொற்றவே லெடுத்தே.

  • வில்லிபாரதம் – உத்தியோக பருவம் – கிருட்டிணன் தூதுசருக்கம் -243

கர்ணனைப் பாண்டவர் பக்கம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் கண்ணன். அதற்காகக் கர்ணனின் மாளிகைக்கு வந்தார். 

”கர்ணா ! நீ நல்லவன். தீயவர்களாகிய கௌரவர்களின் தொடர்பை விட்டுவிடு, போரில் பங்கெடுத்துக் கொள்ளாதே” என்றார்.

“கண்ணா ! நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை . என் உயிரினும் மேலான நண்பன் துரியோதனன். எந்தச் சூழலிலும் அவனை விட்டு விலக மாட்டேன்”.

‘கர்ணா! உன் பிறப்பு உண்மையைச் சொல்கிறேன். உன்னைப் பெற்ற தாய் குந்தி (Kunthi) தேவிதான். பாண்டவர்கள் உன் தம்பியர் ஆவர். தம்பியர் பக்கம் சேர்ந்துவிடு”.

இதைக் கேட்ட கர்ணன் திகைத்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. உணர்வு வரப் பெற்ற அவன், “கண்ணா ! நண்பனுக்காகப் போரிடுவதே என கடமை, போரில் இறக்க நேர்ந்தாலும் எனக்குக் கவலை இல்லை” என்று உறுதியாகச் சொன்னான். 

ஏமாற்றத்துடன் திரும்பிய கண்ணன் குந்தி தேவியைச் சந்தித்தார். “கர்ணனிடம் சென்று அவன் தாய் என்ற உண்மையைச் சொல். பாண்டவர்கள் பக்கம் அவனைச் சேர்க்க முயற்சி செய். இயலாவிட்டால் இரண்டு வரங்களைக் கேள்” என்று அவளை அனுப்பி வைத்தார்.

அதன்படியே கர்ணனைச் சந்தித்தாள் குந்தி. அவன் மீது பாச மழை பொழிந்தாள். தம்பியர் பக்கம் சேர்ந்துவிடு என்று வேண்டினாள். கர்ணனனோ அதை ஏற்க மறுத்துவிட்டான்.

“மகனே! பாண்டவர்களில் அர்ச்சுனனைத் தவிர யாரையும் கொல்லக் கூடாது. நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. இந்த இரு வரங்களை எனக்குத் தா” என்று கேட்டாள் அவள்.

அப்படியே தந்தேன்” என்றான் கர்ணன். 

தெறுகணையொன்று தொடுக்கவுமுனைந்து செருச்செய்வோன் சென்னியோடிருந்தான்

மறுகணைதொடுப்பதாண்மையோவலியோமானமோ மன்னவர்க்கறமோ வுறுகணையொன்றேபார்த்தன்மேற்றொடுப்பனொழிந்துளோருய் வரென்றுரைத்தான் 

தறுகணரலர்க்குந்தறுகணானவர்க்குந்தண்ணளிநிறைந்த செங்கண்ணான்.

  • வில்லிபாரதம் – உத்தியோக பருவம் – கிருட்டிணன் தூதுசருக்கம் -259

அம்மா நான் யார் என்ற உண்மையை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்” என்றான். அப்படியே செய்கிறேன்” என்று வாக்குத் தந்தாள் குந்தி.

முயற்சி வெற்றி பெறாத கண்ணன் அத்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டார். பாண்டவர்களிடம் வந்த அவர், “யாருடைய அறிவுரையையும் துரியோதனன் கேட்க வில்லை . போர் செய்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை ” என்றார். 

பாண்டவர்கள் போருக்கான ஆயத்தங்களை மும்முரமாகச் செய்தார்கள். ஏழு அக்ரோணி படைகள் அவர்கள் பக்கம் சேர்ந்தன. திஷ்டத்தும்மன் படைத் தலைவனாக நியமிக்கப்பட்டான். நால்வகைப் படைகளும் அணிவகுத்து குருசேத்திரத்தை அடைந்தார்கள்.

அத்தினாபுரத்திலும் போருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. கௌரவர் பக்கம் பதினோரு அக்ரோணி படைகள் குவிந்தன. பீஷ்மரை வணங்கிய துரியோதனன் “கௌரவர் படைக்குத் தலைமை ஏற்க வேண்டும். வெற்றியைத் தேடித் தர வேண்டும்” என்று வேண்டினான்.

மகிழந்த அவர், “துரியோதனா! கௌரவர்களை போலவே பாண்டவர்களும் என் அன்புக்கு உரியவன் அதனால் பாண்டவர்களை நான் கொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் படைக்குப் பேரழிவை ஏற்படுத்துவேன் நாள்தோறும் பத்தாயிரம் வீரர்களைக் கொல்வேன்.

கர்ணன் போர்க்களத்தில் இருந்தால் நான் போரிட மாட்டேன். இவற்றிற்கு ஒப்புக் கொண்டால் தலைமை ஏற்கிறேன்” என்றார். அங்கிருந்த கர்ணன் இதைக் கேட்டு கோபம் கொண்டான். “பீஷ்மர் உயிருடன் இருக்கும் வரை நான் போரிட மாட்டேன்” என்றான்.

கௌரவர் படைக்குத் தலைமை ஏற்றார் பீஷ்மர். துரியோதனனை மகிழ்ச்சிப்படுத்த நினைத்தார். எதிரிப் படை தலைவர் ஒவ்வொருவர் வலிமையையும் சொன்னார். தன்னிடம் அவர்கள் அடையப் போகும் தோல்வியையும் சொன்னார்.

“காசி இளவரசன் சிகண்டியுடன் நான் போர் செய்ய மாட்டேன்” என்றார். “ஏன்?” என்று கேட்டான் துரியோதனன் “எப்பொழுதோ நிகழ்ந்த நிகழ்ச்சி. என்னால் தன் வாழ்வை இழந்ததாக நினைத்தாள் அம்பா. என்னைக் கொல்வதற்காக சிவ பெருமானை வேண்டித் தவம் இருந்தாள். அடுத்த பிறவியில் பீஷ்மரைக் கொல்வாய் என்று வரம் தந்தார் சிவ பெருமான்.

காத்திருக்க விரும்பாத அவள் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். காசி அரசனுக்கு மகளாகப் பிறந்தாள். மகனைப் போலவே அவளை வளர்த்தார்கள். ஓர் யட்சனின் உதவியால் அவள் ஆணாகவே மாறினாள்.

ஆணும் பெண்ணும் அல்லாத அவளுடன் நான் போரிட மாட்டேன்” என்றார் பீஷ்மர். கௌரவர் படைகளும் குருட்சேத்திரத்தை அடைந்தன. மறுநாள் போர் – தொடங்குவது என்று முடிவு செய்தனர்.