சென்ற பாடத்தில் குற்றியலகரம் பற்றி பார்த்தோம். இதுவே குற்றியலிகரம் பற்றி தெரிந்து கொள்வோம். இதனை குறுமை + இயல் + இகிரம் எனப் பிரிக்கலாம். குறுமை என்றால் குறுகிய என்ற பொருள்படும்; இயல் என்றால் ஓசை; இகரம் என்றால் "இ" என்னும் எழுத்து.

எனவே குறுகிய ஓசையுடைய இகரம், குற்றியலிகரம் ஆகும்.

குற்றியலுகரத்தின் உகரம் தன் ஒரு மாத்திரையில் குறைந்து ஒலிப்பது போலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும், ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.

குற்றியலிகரம் எங்கு குறைந்து ஒலிக்கும் என்பதை பார்ப்போம். நாகு + யாது = நாகி யாது. வீடு+ யாது= வீடியாது. இச்சொற்களை ஒலித்து பார்த்தால் , நாகு, வீடு என்பதை நெடில் தொடர் குற்றியலுகரச்சொற்கள். இவை நிலை மொழியாய் நிற்க, வருமொழியின் முதல் எழுத்து யகரம் ஆக இருப்பின், உகரம் இகரம் ஆகும். இந்த இகரம் தான் குற்றியலிகரம் எனப்படும். அதாவது நிலைமொழி குற்றியலுகரம் ஆக இருந்து வருமொழி யகரம் வரின், நிலைமொழி உகரம், இதர மாகத் திரிந்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். மேற்கூறிய எடுத்துக்காட்டுகளை போல் பின்வரும் எடுத்துக்காட்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். அவை வண்டி + யாது = வண்டியாது; வரகு+ யாது = வரகியாது.

யகரம் வரக் குறள் உத்திரி இகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய – நன்னூல், 92