மரபுச் சொற்கள் என்றால் என்ன?

மரபுச் சொற்கள் என்றால் என்ன: நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்கள் ஓ அப்பொருளை சொல்லால் குறிப்பதே மரபு எனப்படும்.
மரபுச் சொற்கள் நம் தமிழ் பாரம்பரியத்தின் ஒரு முக்கியமான வழித் தொடர் மற்றும் அளவுகோல் என்று குறிப்பிட வேண்டும். மரபுச் சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களை பயன்படுத்துவது மரபு பிழை.எடுத்துக்காட்டாக இங்கே சில இளமை மரபுச் சொற்களை குறிப்பிட விரும்புகின்றேன்.

தாவரங்கள்: காய்களின் இளமை மரபு

 1. அவரைப்பஞ்சு
 2. கத்தரிப்பிஞ்சு
 3. வாழைக்கச்சல்
 4. வெள்ளரிப்பிஞ்சு
 5. தென்னங்குரும்பை
 6. மாவடு

விலங்குகள்: இளமை மரபு

 1. குருவிக்குஞ்சு
 2. கோழிக்குஞ்சு
 3. ஆட்டுக்குட்டி
 4. கழுதைக்குட்டி
 5. எருமை கன்று
 6. பன்றிக்குட்டி
 7. மான் கன்று
 8. நாய்க்குட்டி
 9. பூனைக்குட்டி
 10. சிங்கக் குருளை
 11. புலிப்பறழ்
 12. கீரிப்பிள்ளை

ஒலி மரபுச் சொற்கள்

 1. குயில் கூவும்
 2. மயில் அகவும்
 3. காகம் கரையும்
 4. கிளி கொஞ்சும்
 5. கூகை குழறும்
 6. குதிரை கனைக்கும்
 7. சிங்கம் முழங்கும்
 8. நரி ஊளையிடும்
 9. யானை பிளிரும்

வினை மரபுச் சொற்கள்

 1. அப்பம் தின்
 2. காய்கறி அரி
 3. இறை வழி நெல் தூற்று
 4. பழம் தின்
 5. நீர் பாய்ச்சு
 6. பாட்டு பாடு
 7. மலர் கொய்
 8. களை பறி

இருப்பிடம் மரபு சொற்கள்

 1. கரையான் புற்று
 2. ஆட்டுப்பட்டி
 3. மாட்டுத் தொழுவம்
 4. குதிரை கொட்டில்
 5. கோழிப்பண்ணை
 6. குருவிக்கூடு
 7. சிலந்தி வலை
 8. எலி வளை
 9. நண்டு வளை

தாவர உறுப்பு மரபு சொற்கள்

 1. வேப்பந்தழை
 2. ஆவரம் குழை
 3. நெல் தாள்
 4. வாழைத்தண்டு
 5. கீரைத்தண்டு
 6. தாழை மடல்
 7. முருங்கைக்கீரை
 8. தென்னங்கீற்று
 9. கம்பந் தட்டு
 10. சோளத்தட்டு
tamiltutor.com