வினைமுற்றை பார்ப்பதற்கு முன், நாம் காலங்கள் எத்தனை வகைப்படும் என்பதை பார்ப்போம். காலங்கள் மூன்று வகைப்படும் அது நிகழ்காலம் (present tense), இறந்த காலம் (past tense), எதிர் காலம்(future tense) ஆகும்.
நடந்து முடிந்தது இறந்தகாலம், நடந்துகொண்டு இருப்பது நிகழ்காலம் மற்றும் நடக்க இருப்பது எதிர்காலம் ஆகும். வினைமுற்று பெயரெச்சம் வினையெச்சம் இவை மூன்றும் முக்காலத்திற்கும் தொடர்பு உண்டு என்பதற்காகவே முக்காலத்தை பற்றி தெரிந்து கொண்டோம்.

வினைமுற்று (Finite verb) என்றால் என்ன?

ஒரு செய்யும் முடிந்ததனைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும்.
இதற்கு எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் ” ராமன் பழுத்த மாம்பழத்தையும், பால் சொம்பையும் எடுத்து வந்தான்” . இதில் வரும் “வந்தான்” என்பது ‘செயல்‘ முற்றுப்பெற்ற தனை உணர்த்துவதால், இது வினைமுற்று ஆகும். இந்தச் சொல் இருந்து காலத்தைக் காட்டுகிறது.“வந்தான்” என்னும் இச்சொல் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வரும்.

பெயரெச்சம் (Relative participle) என்றால் என்ன?

மேற்கூறிய வார்த்தையில் “பழுத்த” என்னும் சொல், நாம் பெயர் எச்சத்திற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பழுத்த என்னும் சொல் முற்றுப் பெறாத வினைச்சொல் ஆகும். இச்சொல் மாம்பழம் என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவு பெறுகிறது. இவ்வாறு
ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரெச்சம் ஆகும்.
இது மூன்று காலத்திலும் வரும். பழுத்த என்னும் சொல் இருந்த காலத்தில் வந்துள்ளது போல, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் குறிக்கலாம். அதாவது பழுகின்ற மாம்பழம் பழுக்கும் மாம்பழம் என வரும்.

வினையெச்சம் (Verbal participle) என்றால் என்ன?

மேற்கூறிய உதாரணத்தில் எடுத்து என்னும் சொல்லை கூர்ந்து கவனிப்போம். எடுத்து என்னும் முற்றுப் பெறாத வினைச்சொல் வந்தான் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. இவ்வாறு
வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் ஆகும்
அதேபோல் வினையெச்சம் முக்காலத்தையும் உணர்த்தும்.–tamiltutor.com