தமிழுக்கு அளப்பரிய பெருமை என்றால் அது அதனுடைய தனித்துவம் தான். அந்த தனித்துவத்தை மிகவும் அழகு படுத்தி காட்டுவதே இந்த வேற்றுமை உருபு ஆகும்.
உதாரணத்திற்கு பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபு எனப்படும். இவ்வேற்றுமை
- முதல் வேற்றுமை,
- இரண்டாம் வேற்றுமை,
- மூன்றாம் வேற்றுமை,
- நான்காம் வேற்றுமை,
- ஐந்தாம் வேற்றுமை,
- ஆறாம் வேற்றுமை,
- ஏழாம் வேற்றுமை மற்றும்
- எட்டாம் வேற்றுமை என்று எண் வகைப்படும்.
கீழ்க்கண்ட இரண்டு வாக்கியங்களை எடுத்துக் கொள்வோம்.
1 கண்ணன் பரிசு பெற்றான்.
2 ஆசிரியர் கண்ணனை பாராட்டி பரிசு வழங்கினார்.
மேலே உள்ள முதல் தொடரில் கண்ணன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது. இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் கண்ணனை மற்றவர் பாராட்டியது குறிக்கிறது. இத்தொடரில் கண்ணன் என்னும் பெயர்ச் சொல்லின் பொருள் வேறுபடுகிறது. இவ் வேறுபாட்டுக்கு காரணம், கண்ணன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள “ஐ” என்னும் உருபு. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும். பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைத் செய்யும் உருபுகளை வேற்றுமை உருபு என்பர்.சற்று விளக்கமாகக் கூறவேண்டும் என்றால் அடுத்த தொடரில் பார்ப்போம். உதாரணமாக ராஜா கண்டான் – இது தொடர், ராஜாவை கண்டான் என வரும்பொழுது இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன. முதல் தொடரானது ராஜா வேறொருவனை பார்த்தான் எனவும், இரண்டாம் தொடரானது தேர் ஒருவன் ராஜாவை பார்த்தான் எனவும் பொருள் வேறுபடுகிறது. நன்றாக கூர்ந்து கவனித்துப் பாருங்கள், இந்தச் சிறு மாற்றத்திற்கு காரணம் “ஐ” என்ற எழுத்து தான்.இவ்வாறு பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபு எனப்படும்.
முதல் வேற்றுமை என்றால் என்ன?
ஒரு பெயர் இயல்பாக பயனிலை கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனப்படும் அல்லது எழுவாய் வேற்றுமை எனவும் வழங்குவர்.எடுத்துக்காட்டு: கண்ணன் வந்தான், அவன் ராஜா, அவன் யார்
இரண்டாம் வேற்றுமை என்றால் என்ன?
ஒரு பெயர்ச்சொல்லின் அது பொருளை செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை ஆகும்.எடுத்துக்காட்டு: யாமினி செய்யுளை படித்தாள். இவ்வாக்கியத்தில் உள்ள செய்யுள் என்னும் பெயர்ச்சொல் “ஐ” என்னும் உழைப்பை ஏற்று செயப்படு பொருளாக வேறுபடுத்தி காட்டுகிறது.
மூன்றாம் வேற்றுமை என்றால் என்ன?
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியவை.நாற்காலி தச்சன் ஆனால செய்யப்பட்டது என்பது ஆல் வேற்றுமை உருபு ஆகும்.தந்தையோடு மகன் வந்தான் என்பது ஒடு வேற்றுமை உருபு ஆகும்.தாயுடன் அண்ணனும் வந்தான் என்பது உடன் வேற்றுமை உருபு ஆகும்.
நான்காம் வேற்றுமை உருபு என்றால் என்ன?
நான்காம் வேற்றுமை உருபு “கு” ஆகும். அம்மா அண்ணனுக்கு தோசை சுட்டார். அண்ணன் என்னும் சொல் “கு” என்னும் உருபை ஏற்று பொருள் வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஐந்தாம் வேற்றுமை உருபு என்றால் என்ன?
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் “இல்” , “இன்” என்பன.எடுத்துக்காட்டு: கொடையில் என்பவர் பாரி. இந்தியாவின் தலைநகரம் புது டெல்லி. மேற்கொண்ட தொடர்களில் “இல்” மற்றும் “இன்” என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
ஆறாம் வேற்றுமை உருபு என்றால் என்ன?
ஆறாம் வேற்றுமை உருபு அது என்பது எடுத்துக்காட்டு ராமனது வீடு. எனது புத்தகம். இத்தொடர்களில் ராமன் என் ஆகிய பெயர் சொற்களுடன் அது என்னும் வேற்றுமை உருபு சேர்ந்து பொருளை வேறுபடுத்துகிறது.
ஏழாம் வேற்றுமை உருபு என்றால் என்ன?
ஏழாம் வேற்றுமைக்கு கண் மேல் கீழ் உள் கீழ் என்பன உருபுகள் ஆம்.எடுத்துக்காட்டு:வீட்டின் கண் குழந்தை விளையாடுகிறது
பெட்டிக்குள் பணம் இருக்கிறது
கூரையின் மேல் சேவல் உள்ளது
கட்டிலின் மேல் நான் படுத்து உள்ளதுஇத்தொடர்களில் வீடு பெட்டி கூரை கட்டில் ஆகிய சொற்களுடன் மேல் கண் கீழ் உள் ஆகிய உறுப்புகள் சேர்ந்து இடப் பொருளை உணர்த்துகின்றன.
எட்டாம் வேற்றுமை என்றால் என்ன?
எட்டாம் வேற்றுமை உண்டு ஆனால் அதற்கு உருபு இல்லை.உதாரணம், மணிகண்டா வா!இத்தொடரில் மணிகண்டன் என்னும் சொல்லில் இறுதியில் இன் எழுத்தானது கெட்டு அதன் அயல் எழுத்து நீண்டு அழைத்த பொருளைத் தருகிறது. இவ்வாறு பெயர்ச்சொல் சில மாற்றங்களுடன் அழைத்ததின் பொருளில் வருவதனை விளி வேற்றுமை என்பர்.–
tamiltutor.com